You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பிளாஸ்டிக் உருகின மாதிரி தீயில என் உடல் எரிந்தது" - BBC 100 Women
2000 டிசம்பரில் அதிக வரதட்சணையை வழங்க இவரது பெற்றோர் தவறியதால், சினேகா ஜவாலேயின் கணவர் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். அந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் தரவில்லை. பிறகு தனது கணவர் தங்கள் மகனுடன் வெளியேறினர்.
அதன் பிறகு, முகத்தை மக்கள் பார்க்க அவசியமற்ற பணிகளாக கருதப்படும் டாரட் கார்டு ரீடர் எனப்படும் அதிர்ஷ்ட அட்டை படிப்பவராக, திரைக்கதை எழுத்தாளராக இவர் இருக்கிறார். இதன் மூலம் தனது வாழ்வை மீள்கட்டியெழுப்ப சினேகா தீர்மானித்தார்.
தற்போது சமூக சேவகியாக இருக்கும் ஜவாலே, 2012ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைக்க பயன்படுத்தப்படும் நிர்பயா என்ற பெயரிலான நாடகத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். உலகெங்கிலும் உள்ளவர்கள் முன்பு நடிப்பது, இவரது பயத்தை போக்க உதவியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்