"சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை" - பட்ஜெட் பற்றி ஆனந்த் ஸ்ரீநிவாசன் கருத்து

காணொளிக் குறிப்பு, இது ஆந்திரா மற்றும் பிகார் மாநிலங்களுக்கான பட்ஜெட் தான் என்று கூறினார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
"சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை" - பட்ஜெட் பற்றி ஆனந்த் ஸ்ரீநிவாசன் கருத்து

2024-25ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்தன.

இந்த நிதி நிலை அறிக்கையில் ஆந்திரபிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் பல திட்டங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மற்ற பல மாநிலங்கள் இந்த பட்ஜெட் குறித்து ஏமாற்றம் தெரிவித்தன.

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இதனை 'ஆந்திரா - பிகார் பட்ஜெட்' என விமர்சித்தது.

இந்த பட்ஜெட் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

“இந்திய அரசியல் வரலாற்றில் ‘ரயில்வே’ குறித்த எந்த அறிவிப்பும் இல்லாத பட்ஜெட் இதுதான். மிகவும் பாரபட்சமான பட்ஜெட். காங்கிரஸ் அல்லது இதற்கு முந்தைய பாஜக அரசுகள் இப்படிப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை வெளியிட்டதில்லை. இது ஆந்திரா மற்றும் பிகார் மாநிலங்களுக்கான பட்ஜெட் தான்” என்று கூறினார்.

முழு நேர்காணல் காணொளியில்.

நிதிநிலை அறிக்கை குறித்து ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுவது என்ன?

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)