உலகம் சுற்றும் 86 வயது மூதாட்டியின் 'மகிழ்ச்சிக்கான மந்திரம்'
கடந்த 1938ஆம் ஆண்டு பிறந்த மார்கரேட்டுக்கு இப்போது 86 வயதாகிறது. அவர் இப்போதும் உலகம் முழுக்கச் சுற்றி வருகிறார்.
தன்னுடைய பேத்தி மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பி இபிஸா தீவுக்குச் செல்லவே, அவருடன் சென்றுள்ளார் மார்கரேட். ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக தன்னுடைய வாழ்க்கையைக் கழித்து வருகிறார்.
இதுகுறித்து அவருடைய பேத்தி ஜோ கூறுகையில், மார்கரேட் எப்போதும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். மேலும், தொடர்ந்து பல இடங்களுக்குத் தனது பாட்டியுடன் இப்படி ஊர் சுற்றிப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய மார்கரேட், "வயது வெறும் எண் மட்டுமே. எண்ணம் போல் வாழுங்கள். உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். மகிழ்ந்திருங்கள்," என்று தன்னுடைய மகிழ்ச்சியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



