இத்தாலியில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு - காணொளி
இத்தாலியில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு - காணொளி
இத்தாலியில் ஆயிரக்கணக்கான டைனோசர்களின் கால்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில், 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை 'ப்ரொசாரோபாட்ஸ்' வகையைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நீண்ட கழுத்துடைய, சிறிய தலைகளையும் கூர்மையான நகங்களையும் கொண்ட தாவர உண்ணிகள் அவை.
கால்தடங்கள் இருக்கும் பாறைகளை நடந்தே சென்றடைவது கடினமாக இருப்பதால்,விஞ்ஞானிகள் அவற்றை ஆராய ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



