இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்? புதிய அதிபருக்கான சவால்கள் என்ன?
இலங்கையில் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கு கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார்.
இப்போது தாக்கியிருப்பது ஒரு சுனாமி, சாதகமான சுனாமி, இதில் ஊழல்வாதிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் அடித்துச் செல்லப்படுவார்கள் என்று அவர் கூறுகிறார்.
ரணில் விக்ரமசிங்கே ஊழல்வாதி இல்லை என்றாலும், யாரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று அவருக்குத் தெரியவில்லை என்கிறார் அவர்.
வேலையின்மை குறித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுவதாகக் கூறும் அவர், புதிய அரசு எந்தெந்த விஷயங்களில் கவனமாகச் செயல்பட வேண்டும், எவை சவாலாக இருக்கும். கடந்த கால அனுபவங்கள் என்ன கூறுகின்றன என்பது குறித்து பிபிசி தமிழுடனான நேர்காணலில் விரிவாகப் பேசியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



