பொன்னியின் செல்வன் - கதையில் மணிரத்னம் செய்திருக்கும் 7 முக்கிய மாற்றங்கள் என்ன?

பொன்னியின் செல்வன் பாகம் - 2 உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கும் இந்தப் படத்திற்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. அவை என்ன?
மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' நாவல் இரண்டு பாக திரைப்படங்களாக வெளியாகிவிட்டது. முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், இரண்டாம் பாகம் 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
'பொன்னியின் செல்வன்' நாவல் மொத்தம் ஐந்து பாகங்களைக் கொண்டது. அதில் வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் கடலில் மூழ்குவது இரண்டாம் பாகத்தின் இறுதியில் நடக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், அந்தக் காட்சியோடு முடிவுக்கு வந்தது. மீதமுள்ள மூன்று பாகங்களின் கதை தற்போது இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ளது.
நாவலோடு ஒப்பிட்டால் முதல் பாக திரைப்படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கதையின் துவக்கம், கடம்பூர் மாளிகைச் சதி, கந்தமாறன் மீதான கொலை முயற்சி, பூங்குழலியின் அறிமுகம், சிற்றரசர்களுடன் குந்தவையின் சந்திப்பு ஆகியவை வேறுவிதமாக மாற்றப்பட்டிருந்தன. மேலும் குடந்தை ஜோதிடர் போன்ற பாத்திரங்கள் நீக்கப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



