பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இழுத்துச் சென்ற போலீஸ் - என்ன நடந்தது?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இழுத்துச் சென்ற போலீஸ் - என்ன நடந்தது?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலைமை 'இயல்புடன்' உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: