காணொளி: ஐநா கொடுத்த எச்சரிக்கை, தீவிரமெடுக்கும் தண்ணீர் பிரச்னை
தற்போது நீர் தீர்ந்து போனால் அதை மீண்டும் நிரப்ப முடிகிறது. ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லாமல் போனால் என்ன நடக்கும்?
ஆம், நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக நிறுவனம் (United Nations University Institute for Water, Environment and Health), சமீபத்தில் 'உலகளாவிய நீர் திவால்நிலை 2026' (Global Water Bankruptcy 2026) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகம் இப்போது வெறும் தண்ணீர் பஞ்சத்தில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி 'நீர் திவால்நிலை' எனும் அபாயகரமான கட்டத்தில் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நீர் திவால்நிலை என்றால் என்ன?
நேரடியாகச் சொன்னால், இது நீர் நெருக்கடிக்கு அடுத்த கட்டமாகும். நாம் தண்ணீரை மீண்டும் பெற முடியாத அளவிற்கு மிக அதிகமாகவும், வேகமாகவும் செலவழித்துவிட்டோம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
மனித நீர் அமைப்பில் மூன்று நிலைகள் உள்ளன. இதைப் பற்றியும் இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
1. நீர் அழுத்தம்: நமக்குக் கிடைக்கும் தண்ணீரை விட நமது நீர் தேவை அதிகமாக இருக்கும் நிலையை இது குறிக்கிறது. எனினும், முறையான மேலாண்மை மற்றும் சிறிய மாற்றங்களின் மூலம் இதனைச் சரிசெய்துவிட முடியும்.
2. நீர் நெருக்கடி : வறட்சி, வெள்ளம், மாசுபாடு (Pollution) போன்ற திடீர் காரணங்களால் நீர் அமைப்பு தற்காலிகமாகப் பாதிக்கப்படும் நிலை இதுவாகும். அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டால் இதையும் சரிசெய்ய இயலும்.
3. நீர் திவால்நிலை : மேற்கண்ட இரண்டு நிலைகளையும் தாண்டி, நீண்ட காலமாகக் தண்ணீரை மிக அதிகமாகப் பயன்படுத்தியதால் நீர் வளங்கள் கடுமையாகச் சேதமடைந்த நிலையாகும். நாம் இப்போது இந்த நிலையில்தான் இருக்கிறோம்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



