காணொளி: பத்மஸ்ரீ பெறப்போகும் பழங்குடியின ஓவியர் குடும்பத்தின் நிலை என்ன?
காணொளி: பத்மஸ்ரீ பெறப்போகும் பழங்குடியின ஓவியர் குடும்பத்தின் நிலை என்ன?
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இறந்தவர்கள் 16 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதில், ஆலு குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஓவியரான கிருஷ்ணனும் ஒருவர்.
கடந்த ஆண்டு, குன்னுாரில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோதே, மாரடைப்பால் இறந்துபோன கிட்டா என்கிற கிருஷ்ணன் (வயது 52) பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் வெள்ளரிகோம்பை என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலு குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறையை தனது ஓவியங்களில் பதிவு செய்து வந்தார்.
அவருடைய குடும்பத்தின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



