காணொளி: குவியும் குப்பையால் மாசுபடும் நதி - கழுகுப் பார்வை காட்சி
காணொளி: குவியும் குப்பையால் மாசுபடும் நதி - கழுகுப் பார்வை காட்சி
போஸ்னியாவின் டிரினா நதியில் குப்பைகள் தேங்கியுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு குளிர்காலத்திலும் டிரினா நதி மிதக்கும் குப்பை மேடாக மாறுகிறது.
கனமழையும் உருகும் பனியும் டன்கணக்கில் குப்பைகளை கொண்டு வந்து போஸ்னியாவில் உள்ள நீர்மின் நிலையம் அமைத்த தடுப்புகளில் தேக்கி விடுகின்றன.
இந்த குப்பை போஸ்னியாவின் மேல்பகுதியில் உள்ள சட்டவிரோத குப்பை மேடுகளிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



