அலங்காநல்லூர்: உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டின் சுவாரஸ்ய நிகழ்வுகள்
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் ஜனவரி 16ஆம் தேதி அன்று நடந்தது. 9 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கொடி அசைத்து துவங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
அலங்காநல்லூரில் 1000 காளைகளை வாடிவாசல் வழியே திறந்துவிடும் முடிவை எடுத்திருந்தது மதுரை மாவட்ட நிர்வாகம்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் என்பவர் மாடுபிடி வீரராக களம் இறங்க முயன்ற போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார் அவர். ஆனால் அவரின் வயது காரணமாகவே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இப்படியாக, புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் யாவை? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



