யுக்ரேன்-ரஷ்யா போர்: இந்தியா நடுநிலை வகிக்கிறதா? மோதி கூறியது என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இருநாட்டு தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் யுக்ரேன் - ரஷ்யா போர் குறித்து பிரதமர் மோதி பேசினார்.
"நான் ரஷ்யா மற்றும் யுக்ரேனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது உங்களுக்குத் தெரியும். நான் இருநாட்டு தலைவர்களையும் சந்தித்துள்ளேன். இந்தியா' நடுநிலை' வகிக்கிறது என்ற தவறான எண்ணம் பலருக்கும் இருக்கிறது. இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா 'அமைதி' அதாவது சமாதானத்தின் தரப்பில் உள்ளது", என்று பிரதமர் மோதி தெரிவித்தார்
"அதிபர் புதின் முன்னிலையில் ஊடகங்களிடம் 'இது போருக்கான நேரம் அல்ல' என்று நான் தெளிவுபடக்கூறினேன். பிரச்னைகளுக்கான தீர்வு போர்க்களங்களில் கிடைப்பதில்லை, பேச்சுவார்த்தை மூலமே தீர்வை எட்ட முடியும் என்று இன்றும் நான் உறுதியாக நம்புகிறேன். இந்த இருதரப்பும் இருக்கும் ஏதோ ஒரு பொது மன்றத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால்தான் ஏதாவது ஒரு தீர்வு பிறக்கும் என்று இந்தியா கருதுகிறது. அதிபர் டிரம்ப் செய்யும் முயற்சியை நான் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன். உலகத்தில் சமாதானத்துக்கான பாதையை திறக்கும் வகையில் அதிபர் டிரம்பின் முயற்சி விரைவில் வெற்றிபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்", என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்த முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



