You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை தாக்குதலில் உயிர் தப்பிய 9 வயது சிறுமி இப்போது எப்படி இருக்கிறார்?
"எங்களுக்கு வீடு கொடுக்கப்படும் எனவும் படிப்புக்கான அனைத்து செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், தேவைப்படும் போதெல்லாம் உதவி செய்யப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்களுக்கு யாரும் உதவவில்லை." என்கிறார் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்தவரான தேவிகா ரோட்டாவன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக, அந்தேரியில் 300 சதுர அடியில், ஒரு படுக்கை அறை வீடு கிடைத்துள்ளது.
"2008ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட போது தேவிகாவுக்கு வெறும் 9 வயதாகி இருந்தது. உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாபிற்கு எதிராக சாட்சியமளித்த 177 சாட்சிகளில் இளையவர் தேவிகாதான்"
அன்றைய தினம் என்ன நடந்தது, அவர் தற்போது என்ன செய்து வருகிறார், இழப்பீடாக வீடு பெற அவர் நடத்திய போராட்டம் என்ன என்பதை இந்தக் காணொளியில் முழுமையாகக் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு