You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'பகலில் பாதிரியார், இரவில் DJ' - லெபனானில் பிரபலமாகும் இவர் யார்?
பெய்ரூட், லெபனான்...
பகலில் திருப்பலி நடத்தும் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், இரவில் DJ வாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
போர்ச்சுக்கலை சேர்ந்த கத்தோலிக்க பாதிரியாரான கில்ஹெர்மே பெய்ஷோட்டு, பகலில் பாதிரியாராகவும், இரவில் மத இசையில் கலக்கும் DJ ஆகவும் உள்ளார்.
நம்பிக்கை குறித்த செய்தி இல்லையென்றாலும் இது மரியாதையும் சகிப்புத்தன்மையும் சொல்லும் வலுவான செய்தி.
நாம் ஒன்றாக நடனமாட முடிந்தால், வெளியிலும் ஏன் ஒன்றாக இருக்க முடியாது?
"இந்த இரவு விடுதி நிகழ்ச்சியில் இவர் 2000 பேருடன் சேர்ந்து பார்ட்டி செய்தார். இது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதால் இன்று திருப்பலிக்கு வந்தேன். இப்படிப்பட்ட விஷயத்தை அடிக்கடி பார்க்க முடியாது. அதனால் திருப்பலிக்கும் வந்தேன், இரவில் பார்ட்டியிலும் கலந்து கொள்வேன்." என்றார் பார்வையாளர் ஒருவர்.
ஆனால் ஒரு சிறிய கிறிஸ்தவ குழு புகார் கொடுத்ததால், இந்த நிகழ்ச்சி நடக்காமல் போகும் நிலை வந்தது.
இப்படிப் பட்ட கடும் எதிர்ப்பை முதல் முறையாக தான் எதிர்கொண்டதாக ‘பாதிரியார் கில்ஹெர்மே’ கூறுகிறார்.
'நான் செய்வது பிடிக்கவில்லை அல்லது உங்களுக்கு சிரமமாக இருந்தால், தயவுசெய்து எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அதற்காக நான் இனிமேல் எதையும் செய்ய முடியாது.'
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு