இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் கட்சிகளின் பின்னடைவுக்கு என்னக் காரணம்?

காணொளிக் குறிப்பு,
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தமிழ் கட்சிகளின் பின்னடைவுக்கு என்னக் காரணம்?

இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் கட்சிகளை விட தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களை கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்தமாக 159 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே கைப்பற்றிய தேசிய மக்கள் சக்திக்கு இது மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இது தமிழ் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

`தேசிய மக்கள் சக்தி’ பெற்றிருக்கும் இந்த பெரிய வெற்றிக்கு காரணம் என்ன? தமிழ் தேசிய கட்சிகள் பின்னடைவை சந்தித்தது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பதிலளித்துள்ளார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)