You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஒரே மூச்சில் 126 மீட்டர் ஆழம் கடலுக்குள் சென்று ரஷ்யர் சாதனை
ஒரே மூச்சில் 126 மீட்டர் தூரம் ஆழம் வரை கடலுக்குள் சென்று ரஷ்யாவை சேர்ந்தவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ரஷ்ய ஃப்ரீடைவர் அலெக்ஸி மோல்கனோவ் சைப்ரஸின் லிமாசோலில் நடைபெற்ற AIDA ஃப்ரீடைவிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார்.
நான்கு நிமிடங்கள் 32 வினாடிகள் மூச்சைப் பிடித்துக் கொண்டு, ஹெட்லைட், இரண்டு துடுப்புகள் மற்றும் ஒரு கயிற்றை வழிகாட்டியாகக் கொண்டு மத்திய தரைக் கடலில் ஆழமாக இறங்கினார்.
இந்த சாதனை தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவாலான ஃப்ரீடைவ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மோல்கனோவ் 2024 ஆம் ஆண்டு தனது சொந்த சாதனையான 125 மீட்டரை கடந்து புதிய உலக சாதனையை படைத்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.