காணொளி: ‘இரானுடனான பேச்சுவார்த்தைகளில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பேன்' - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, காணொளி: ‘இரானுக்கு பி2 போர் விமானங்களை அனுப்ப வேண்டியதாயிற்று’- டிரம்ப்
காணொளி: ‘இரானுடனான பேச்சுவார்த்தைகளில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பேன்' - டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இரான்- அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசும்போது, 'அணுசக்தி திறனை அழிக்க பி2 குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியதற்குப் பதிலாக ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்கலாம்' எனக் கூறினார்.

"நான் அந்த பேச்சுவார்த்தைகளில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பேன், அவை மிகவும் முக்கியமானவையாக இருக்கும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொதுவாக இரானுடன் பேச்சுவார்த்தை என்பது கடினமான விஷயம். பேச்சுவார்த்தையில் அவர்கள் சிறந்தவர்கள் அல்லர். அவர்களின் அணுசக்தி திறனை அழிக்க பி2 குண்டுவீச்சு விமானங்களை அனுப்பியதற்குப் பதிலாக ஒரு ஒப்பந்தத்தை எட்டியிருக்கலாம். நாம் பி2 குண்டுவீச்சு விமானங்களை அனுப்ப வேண்டியதாயிற்று. இம்முறை அவர்கள் சரியான முறையில் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள்." என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு