காணொளி: வியட்நாமில் 52,000 வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: வியட்நாமில் 52,000 வீடுகளை மூழ்கடித்த வெள்ளம்

மத்திய வியட்நாமில் கடந்த வார இறுதிமுதல் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடும் வெள்ளத்தால் 52,000க்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கியதாகவும், சுமார் 5 லட்சம் வீடுகள் மற்றும் தொழில்கள் மின்சாரமின்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு