வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைவது ஏன்?

வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைவது ஏன்?

தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்கள் இந்தியா - வங்கதேச உறவில் அசாதாரண சூழலை உருவாக்கி உள்ளன.

1971 வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் என கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டம், தடம் மாறி வங்கதேசத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறையில் ஆழ்த்தி உள்ளது.

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்த விவகாரம் அந்நாட்டில் ஒருசாரர் மத்தியில் கோபத்தை தூண்டி இருந்தது. அந்நாட்டு தலைவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்தச் சூழலில் அண்மையில் இன்கிலாப் மான்ச் மாணவர் அமைப்பின் தலைவரான உஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, மீண்டும் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இந்தியா தப்பிச் சென்று விட்டதாக தகவல் பரவியது. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியே ஒரு கும்பல் திரண்டு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது.

அதன் தொடர்ச்சியாக வங்கதேசத்தின் தேசிய குடிமக்கள் கட்சியை சேர்ந்த ஹஸ்னத் அப்துல்லா உள்ளிட்ட சில வங்கதேசத் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, நிலைமை விரைவில் சீரடைய வாய்ப்புள்ளதா என பிபிசி சில நிபுணர்களுடன் பேசியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு