''உஷா பற்றியோ, அவரது பெற்றோர் பற்றியோ தெரியவில்லை..ஆனால்! ''- உஷா வான்ஸ் பூர்வீக கிராமம் எப்படி உள்ளது?

காணொளிக் குறிப்பு, உஷா வான்ஸின் பூர்வீகக் கிராமம் எங்குள்ளது?
''உஷா பற்றியோ, அவரது பெற்றோர் பற்றியோ தெரியவில்லை..ஆனால்! ''- உஷா வான்ஸ் பூர்வீக கிராமம் எப்படி உள்ளது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வான்ஸ் சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். இவரது மனைவி உஷா சிலுகுரி வான்ஸ்.

உஷாவின் பூர்வீகக் கிராமம் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் வட்லூரு. இது அம்மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

உஷா சிலுகுரியின் தாத்தா வட்லூருவைச் சேர்ந்தவர். ஆனால் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அதன்பிறகு உஷாவின் பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். உஷா அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற்போது அவரது தந்தைவழி அத்தை சென்னையில் வசிக்கிறார்.

வட்லூரு கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பம், அவர்களுக்கும் சிலுகுரி குடும்பத்துக்கும் ஒரு உறவுமுறை இருந்ததாக பிபிசி-யிடம் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு உஷா சிலுகுரி பற்றியோ, அவரது பெற்றோர் பற்றியோ எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இந்தக் கிராமத்தில் தற்போது சாய்பாபா கோவில் இருக்கும் இடத்தில் ஒரு தெருவுக்குச் சிலுகுரி குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்தத் தெருவுன் பெயர்ப்பலகை காணாமல் போய்விட்டது.

மேலும் விவரங்கள் காணொளியில்

உஷா சிலுகுரி வான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)