காணொளி: சீனாவில் மாணவர்களிடம் அத்துமீறும் தனியார் பள்ளிகள் - பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, சீனா: 'மாணவர்களை துன்புறுத்தும் பள்ளிகள்' - பிபிசி புலனாய்வில் தெரியவந்தது என்ன?
காணொளி: சீனாவில் மாணவர்களிடம் அத்துமீறும் தனியார் பள்ளிகள் - பிபிசி புலனாய்வு

சீனாவில் ராணுவம் போல செயல்படும் ஒழுக்கப் பள்ளிக்கு பாவ்பாவ் சென்றபோது வயது 14.

“எனக்குப் பள்ளி செல்வது பிடிக்காது என்பதால் எனக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.” என்கிறார் பாவ்பாவ்.

அப்பள்ளிகளில் உடல் ரீதியான வன்முறை இருந்ததாக பாவ்பாவ் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கூறும் ஆதாரங்கள்பிபிசி ஐ-யிடம்உள்ளன.

“பயிற்றுநர் ஒரு நீளமான பைப்-ஐ எடுத்து என் தலைக்கு மேலே தூக்கி வலுவுடன் அடித்தார். உதாரணமாக, நடன பயிற்சி அல்லது ராணுவ பாக்ஸிங் சரியாக இல்லையெனில், தண்டனை வழங்கப்படும்.” என்கிறார் பாவ்பாவ்.

பணியாளர்கள் அதிகாரிகள் போல நடித்து அவர்களை தங்களுடன் வரச் செய்வதை ரகசிய வீடியோ காட்டுகிறது.

இப்பள்ளிகளுக்கு தாங்கள் கடத்தப்பட்டதாக கூறும் சிலரை பிபிசி கண்டறிந்தது.

தற்போது பாவ்பாவுக்கு19 வயது.

“அந்த பள்ளியின் கோஷங்களை கேட்டு என் அம்மா மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார் என நினைக்கிறேன். நான் ஒழுக்கமான, அவர் விரும்பும் மகளாக இருக்க வேண்டும் என அம்மா விரும்பினார்.” என்கிறார் பாவ்பாவ்.

துன்புறுத்தல், கடத்தல் தொடர்பான ஆதாரங்களை அரசிடம் வழங்கியுள்ளோம் அனைத்து கல்வி நிறுவனங்களும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவை என்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அரசு கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு