காணொளி: சிறுநீர் கழித்தபின் கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, காணொளி: சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் ஏற்படுவது ஏன்?
காணொளி: சிறுநீர் கழித்தபின் கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுவது ஏன்?

சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது.

சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப் பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறி, கழிவறையைவிட்டு வெளியேறிய சில விநாடிகள் அல்லது சில நிமிடங்களுக்குப் பிறகு, சில துளிகள் சிறுநீர் திடீரென வெளியேறுவதாகும்.

பொதுவாக, சிறுநீர் வெளியேறும் குழாயின் (urethra) கீழ் பகுதியில், சிறிதளவு சிறுநீர் தேங்கி நிற்பதாலேயே இது நிகழ்கிறது.

இதைப் பற்றி மருத்துவர் தரும் தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு