சௌதி அரேபியாவில் மோதிய ரொனால்டோ, மெஸ்ஸி - அனல் பறந்த அதிரடி ஆட்டம்

காணொளிக் குறிப்பு, சௌதி அரேபியாவில் மோதிய ரொனால்டோ, மெஸ்ஸி - அனல் பறந்த அதிரடி ஆட்டம்
சௌதி அரேபியாவில் மோதிய ரொனால்டோ, மெஸ்ஸி - அனல் பறந்த அதிரடி ஆட்டம்

சௌதியில் நடந்த போட்டி, இரு சூப்பர்பவர்களும் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியாக இருக்கக்கூடும் என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறின. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக அதிரடி ஆட்டம் இருந்தது.

ரொனால்டோ இரண்டு கோல்களை அடித்தும், இறுதியில் மெஸ்ஸி ஆடிய பி.எஸ்.ஜி அணியே 5-4 என்ற கணக்கில் வெற்றியைக் கைப்பற்றியது. சௌதியின் தலைநகரான ரியாத்தில் நட்புரீதியிலான போட்டி என்றாலும், இத்தகைய வாய்ப்பு எப்போதாவதுதான் கிடைக்கும் என்பதால், அதற்கு எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது.

மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே என்று பி.எஸ்.ஜி அணியில் ஆடிய பலரும் நட்சத்திர ஆட்டக்காரர்கள். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மெஸ்ஸி தனது முதல் கோலை ஸ்கோர் செய்தார்.

சௌதி அரேபியாவில் மோதிய ரொனால்டோ, மெஸ்ஸி - அனல் பறந்த அதிரடி ஆட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: