"நாட்டை அழித்த ஒபாமாவுக்கு நோபல்" - விமர்சித்த டிரம்ப்

காணொளிக் குறிப்பு, ஒபாமாவுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் விருதை கேள்வி எழுப்பிய டிரம்ப்
"நாட்டை அழித்த ஒபாமாவுக்கு நோபல்" - விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை விமர்சித்து அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். "ஒன்றுமே செய்யாமல் அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. அந்த பரிசு எதற்காக வழங்கப்பட்டது என்று கூட அவருக்கு தெரியாது. நாட்டை அழித்ததை தவிர அவர் வேறு ஒன்றும் செய்யவில்லை. அவர் நல்ல அதிபர் அல்ல" என்று டிரம்ப் பேசியுள்ளார்.

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் கையெழுத்தாகியுள்ள நிலையில், நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், டிரம்ப் இதனை பேசியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு