பாகிஸ்தானை ஆதரித்த உலக நாடுகள் – இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நிலையில் பார்க்கப்பட்டதா?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்ற உலக நாடுகள் - இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதா?
பாகிஸ்தானை ஆதரித்த உலக நாடுகள் – இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நிலையில் பார்க்கப்பட்டதா?

மே 7 ஆம் தேதி காலை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது. மே 6-ம் தேதி இரவு, இந்தியா பாகிஸ்தானுக்குள் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது, காலையில் இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

பாகிஸ்தானும் பதிலடி நடவடிக்கையைத் தொடங்கியது, அடுத்த நான்கு நாட்களுக்கு இரு தரப்பிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இத்தகைய சூழ்நிலையில், உலகின் சக்திவாய்ந்த நாடுகள் எவ்வாறு எதிர்வினையாற்றின என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது.

பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாக சீனா வெளிப்படையாக கூறியுள்ளது. துருக்கியும் பாகிஸ்தானுடன் இருந்தது.

மறுபுறம், இந்தியாவுக்காக எந்த நாடும் அவ்வாறு கூறவில்லை.

இந்தியாவுக்கு தற்காப்பு உரிமை உண்டு என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் இஸ்ரேலுடன் ஒப்பிடுகையில், சீனா மிகப் பெரிய நாடு மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.

இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க யாரையும் சார்ந்து இல்லை என்று கூறலாம், ஆனால் வெளியுறவுக் கொள்கை அல்லது ராஜ்ஜிய ரீதியிலான வெற்றி என்பது நெருக்கடி காலங்களில் எத்தனை நாடுகள் உங்களுடன் நிற்கின்றன என்பதையும் பொருத்தது .

மூன்றாவது நாடான அமெரிக்காவால் இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து அதிக கேள்விகள் எழத் தொடங்கின.

அதாவது, சண்டை நிறுத்தம் குறித்து அமெரிக்கா ஏற்கெனவே அறிந்திருந்தது, அமெரிக்காதான் இந்தியர்களுக்கு தகவல் கொடுத்ததே தவிர, இந்திய அரசு அல்ல.

மறுபுறம், டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் பயங்கரவாதத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. டிரம்ப் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் வைத்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாருடைய மத்தியஸ்தத்தையும் இந்தியா ஏற்காது, ஆனால் அமெரிக்கா சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வந்ததாக தெளிவாக கூறியது, பாகிஸ்தானும் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால், இதற்கு பதிலளித்த இந்தியா, அமெரிக்காவின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை.

முழு விவரம் காணொளியில்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு