கேரம் உலகக்கோப்பையில் 3 தங்கம் - அமெரிக்காவில் வாகை சூடிய சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள்

காணொளிக் குறிப்பு, உலகக் கோப்பை கேரம்: ஆட்டோ ஓட்டுநரின் மகள் இந்தியாவுக்காக தங்கம் வென்றது எப்படி?
கேரம் உலகக்கோப்பையில் 3 தங்கம் - அமெரிக்காவில் வாகை சூடிய சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள்

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காசிமா. உலக கேரம் போட்டியில் பங்கேற்ற அவர் இந்தியாவுக்காக மூன்று தங்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் தனி நபர், இரட்டையர் மற்றும் குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் அவர்.

ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா கேரம் போட்டிகள் மீது கொண்டிருந்த ஆர்வமே காசிமாவின் இந்த வெற்றிக்கு தூண்டுதலாக அமைந்துள்ளது என்று கூறுகிறார்.

17 வயதே நிரம்பிய காசிமாவின் கனவு நிறைவேறியது எப்படி? அதற்காக அவர் சந்தித்த தடைகள் என்ன?

முழுவிபரம் இந்த வீடியோவில்

செய்தியாளர் - சாரதா வி

வீடியோ - எடிட் - சாம் டேனியல்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)