முதலைகளுக்கு அருகில் இந்தப் பெண்கள் வேலை செய்வது ஏன்? – காணொளி

காணொளிக் குறிப்பு, இவ்வளவு ஆபத்தான ஏரிக்கு அருகில் இந்தப் பெண்கள் வேலை செய்வது ஏன்? – வீடியோ
முதலைகளுக்கு அருகில் இந்தப் பெண்கள் வேலை செய்வது ஏன்? – காணொளி

காலநிலை மாற்றத்தின் காரணமாக நிகழும் அதீத மழைபொழிவால், கென்யாவின் பரிங்கோ ஏரியின் பரப்பு கடந்த பத்து ஆண்டுகளில் இரட்டிப்பாகி உள்ளது.

இதன் காரணமாக எழுந்துள்ள முக்கியப் பிரச்னை — மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் வரத்துவங்கியிருக்கும் நைல் முதலைகள்.

இந்த ஏரியில் தண்ணீர் எடுக்கச் செல்லும், அல்லது மீன்பிடிக்கச் செல்லும் பல பெண்கள் முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

சில மக்கள் முதலைகளால் ஏரிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமலும் பொயிருக்கிறார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்தச் சமூகத்தின் மக்கள், அரசாங்கம் காலநிலை மாற்றத்தின் பிரச்னைகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்

இதற்காக, அவர்கள் கூட்டாக ஒரு வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இது கென்யாவிலேயே முதன்முறையாகும்.

இதன்மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை தங்கள் வாழ்வாதாரத்தை மீட்க உதவும் என்று நம்புகின்றனர்.

கென்யா ஏரி, முதலைகள், கலநிலை மாற்றம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: