அண்டார்டிகா: காலநிலை மாற்றத்தால் ஹம்பேக் திமிங்கலங்களுக்கு ஆபத்து
காலநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவின் ஹம்பேக் (Humpback) திமிங்கலங்கள் ஆபத்தில் உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே இந்த திமிங்கலங்களை அவர்கள் பின்தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்
திமிங்கலங்களின் திசுக்களை சேகரித்து, பரிசோதித்து, அந்த முடிவுகளின் அடிப்படையில் அவற்றின் ஆரோக்கியம், பிறப்பு விகிதம் குறித்து கண்காணிக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.
"கடலில் பனிக்கட்டிகள் குறைவாக இருக்கும் காலங்களில் திமிங்கலங்களின் பிறப்பு விகிதமும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் குறித்து அறிந்துகொள்ளவும், உயிரினங்கள் மீதான பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் இதுவே சிறந்த வழி" என்கிறார் டாக்டர் நடாலியா.
அண்டார்டிகாவின் ஹம்பேக் திமிங்கலங்கள் சிறு கிரில் மீன்களை உண்ணும். கிரில் மீன்கள் சிறு தாவரங்களை உண்ணும். ஆனால் இப்போது குறைவான கிரில் மீன்களே கிடைப்பதால் திமிங்கலங்களின் உடல் எடை குறைந்து வருவதை டிரோன் புகைப்படங்கள் காட்டுகின்றன.
தொழில்நுட்ப உதவியால் திமிங்கலங்களை கண்காணிப்பதன் மூலம், பல்வேறு கடல் உயிர்களையும் சிறப்பாக பாதுகாக்கலாம் என இந்த விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



