டெல்லியில் 2-வது நாளாக நீடிக்கும் போராட்டம்: இன்று நடந்தது என்ன? 12 புகைப்படங்கள்

அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
படக்குறிப்பு, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் அக்டோபர் 10 முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் பங்கேற்க வந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.

அக்டோபர் 10 அன்று டெல்லி வந்த காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் திப்கே உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் விமானத்திலேயே காவலில் எடுக்கப்பட்டனர்.

சில போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டதால், டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சனிக்கிழமை மட்டும் 7,000 போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமையும் நூற்றுக்கணக்கானோர் காவலில் எடுக்கப்பட்டனர்.

அக்டோபர் 11 அன்று, அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஓராண்டுக்கு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்

இருப்பினும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கிய உரிமை என்றும், போராட்டம் தொடரும் என்றும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வகையில், டெல்லியின் பல பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர்.

போராட்டங்களால் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், மத்திய டெல்லியில் இணையச் சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், போக்குவரத்து மற்றும் இணையச் சேவைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவரவும், சட்டவிரோதக் காவலைத் தவிர்க்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காக்ரோச் ஜனதா கட்சி, வேலையின்மை மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான போராட்டங்கள் மூலம் முன்னதாகவும் கவனம் பெற்றிருந்தது. தற்போது தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி அதன் போராட்டம் தொடர்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸை (நடுவில்) பாதுகாப்புப் படையினர் தடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸை (நடுவில்) பாதுகாப்புப் படையினர் தடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

போராட்டக்காரர்கள் அவ்வப்போது சிறு குழுக்களாகப் போராட்டக்காரர்கள் தடுப்புகளைத் தாண்டி சாலைகளில் ஓடினர். காவல்துறையினர் அவர்களைத் துரத்திச் சென்றனர். சில நொடிகளிலேயே அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, காவலில் எடுக்கப்பட்டனர். சிலர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, காத்திருந்த பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.

செயற்பாட்டாளர் நேஹா போராவைக் காவலில் எடுத்த சம்பவம் மிகவும் பரபரப்பானதாக இருந்தது. காவல்துறையினர் அவரைத் துரத்திச் சென்று பிடித்தனர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்
படக்குறிப்பு, டெல்லியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, காவல்துறையினர் செய்தியாளர் ஒருவரை காவலில் எடுத்த காட்சி
 வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டும் காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
படக்குறிப்பு, வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டும் காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

டெல்லியில் குறைந்தது 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. டெல்லியின் முக்கிய ரயில் நிலையங்களும் மூடப்பட்டதுடன், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு வெளியிலிருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்த பலர் வழியிலேயே ரயில்களில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் காவலில் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்களைத் தொடர அக்கட்சி அழைப்பு விடுத்தது.

ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் போக்குவரத்து முடக்கம் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு அமர்வை நடத்தியது.

 வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டும் காக்ரோச் ஜனதா கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
டெல்லியில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
படக்குறிப்பு, டெல்லியில் போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுத்து அழைத்துச் செல்கின்றனர்.
டெல்லியில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைவர் அபிஜித் திப்கே டெல்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.
படக்குறிப்பு, டெல்லியில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே டெல்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு