You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டெஃப் புக்வேவ் - 'இங்கு காது கேளாதோர் தயக்கமின்றி பேசலாம்'
காது கேளாதோரை ஒருங்கிணைக்கும் சங்கத்தின் செயல்பாடுகள், அனைவரையும் ஈர்த்துள்ளன. பெங்களூருவில்தான் 'டெஃப் புக்வேவ்' முதல் அமர்வை நடத்தியது.
2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்தக் குழு, சமூக வலைத்தளங்களில் விரைவில் பிரபலமடைந்தது.
அவர்களின் அமர்வுகள் சைகை மொழியில் நடக்கின்றன, ஆனால் கேட்கும் திறன் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட இருப்பார்கள்.
நாட்டின் கலாசார, வரலாற்று மற்றும் புவியியல் பன்முகத்தன்மை காரணமாக இந்திய சைகை மொழி மற்ற சைகை மொழிகளிலிருந்து வேறுபடுகிறது.
இது இந்தியாவில் காது கேளாதோர் கலாசாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
'டெஃப் புக்வேவ்' எப்படி செயல்படுகிறது?
- காது கேளாதோர் சமூகத்தின் உதவியுடன், பர்மீத்தின் குழுவினர் தேதியையும் இடத்தையும் தேர்வு செய்கிறார்கள்.
காது கேளாதவர்களுக்கும், கேட்கும் திறன் உள்ளவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்கிறார்கள்.
பர்மீத் ஆங்கிலக் கதைகள் அல்லது கவிதைகளைக் கொண்ட புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்.
- இறுதியாக, அவர் பங்கேற்பாளர்களுடன் உரையாடல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுகிறார்.
சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காது கேளாத மற்றும் கேட்கும் குறைபாடுடையவர்கள் உள்ளனர்.
நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் சைகை மொழி பற்றிய பரந்த அளவிலான அறிவு பற்றாக்குறை உள்ளது.
கேட்கும் திறன் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளவும் உரையாடவும் மிகக் குறைவான தளங்களே உள்ளதாக காது கேளாதோர் கூறுகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு