தென் கொரிய நகரங்கள் கனமழையால் வெள்ளத்தில் மிதந்த காட்சி
தென் கொரிய நகரங்கள் கனமழையால் வெள்ளத்தில் மிதந்த காட்சி
கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் தென்கொரியாவில் பெய்த கனமழையால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தென் கொரியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஹேப்ச்சியான் கவுண்டியில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
அதே போல கேப்யியாங் மற்றும் சாஞ்சியாங் ஆகிய பகுதிகளிலும் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்புப்படையினரால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்த வெள்ளத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



