’வயது வெறும் எண் தான்’ - 72 வயதில் தடகளத்தில் சாதிக்கும் இலங்கை மூதாட்டி
’வயது வெறும் எண் தான்’ - 72 வயதில் தடகளத்தில் சாதிக்கும் இலங்கை மூதாட்டி
இவர் பெயர் அகிலத் திருநாயகி. இலங்கையின் முல்லைத்தீவு-முள்ளியவளை பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 72.
பொதுவாக இந்த வயதில் பலரும் நடப்பதற்கே சிரமப்படுவார்கள். ஆனால், இவர் சர்வதேச நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகிறார்.
சமீபத்தில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது 'மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என, மூன்று பதக்கங்களை வென்றுள்ளார்.
தயாரிப்பு: மடவா குலசூரியா (பிபிசி இலங்கை பிரிவு)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



