காணொளி: 'பா.ஜ.கவின் 2026 தேர்தல் கணக்கு இது தான்' - எஸ்.பி.லட்சுமணன் கூறுவது என்ன?
அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான (எம்.எல்.ஏ) கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார்.
'52 ஆண்டுகாலம் அ.தி.மு.கவுக்காக உழைத்திருக்கிறேன். தொண்டர்களின் உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். என் மீது களங்கம் சுமத்தி நீக்கப்பட்டிருக்கிறது வேதனையளிக்கிறது' என, சனிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார் செங்கோட்டையன்.
"அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையனும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 'இவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும்?' என்பது குறித்து, மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணனிடம் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



