பரிசாக கிடைத்த யானை முத்துராசாவை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பும் இலங்கை
பரிசாக கிடைத்த யானை முத்துராசாவை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பும் இலங்கை
கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கைக்கு தாய்லாந்து யானை ஒன்றை பரிசாக அளித்திருந்தது. முத்துராஜா என்று அழைக்கப்படும் அந்த யானை தற்போது சிகிச்சைக்காக மீண்டும் தாய்லாந்துக்கு திரும்பவுள்ளது.
சிறப்பு விமானத்தின் ஜூலை 2ஆம் தேதி தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு தாய்லாந்து பரிசாக அளித்த இந்த யானை 2001ஆம் ஆண்டு அலுத்கம கந்தே விஹாரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. விஹாரில் யானை சரியாக நடத்தப்படவில்லை என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் யானையை மீண்டும் திரும்ப பெற்று சிகிச்சை அளிப்பது என்ற முடிவை தாய்லாந்து அரசு எடுத்துள்ளது. (முழு தகவல் காணொளியில்)
தயாரிப்பு: சிறீல் உபுல் குமார, பிபிசி சிங்களா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



