பாகிஸ்தானின் கராச்சி நகரில் உணவகம் நடத்தும் இந்துப் பெண் - கடைக்கு வரவேற்பு எப்படி?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உணவகம் நடத்தும் இந்துப் பெண் - கடைக்கு வரவேற்பு எப்படி?

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் கவிதா சோலங்கி. ஆரம்பத்தில், அவரது கடைக்கு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்தனர், ஆனால் ஃபுட் விலாகர்கள் மூலமாக இந்தக் கடை பிரபலமடைந்தது.

“இதற்கு முன் 7 வருடங்கள் கடிகாரம் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிந்தேன். அவை அனைத்தும் புகழ் பெற்ற நிறுவனங்கள். துபாயிலும் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன், ஆனால் எல்லோரும் சொல்வது போல் சொந்த நாடு தானே சொர்க்கம், அதனால் இங்கு வந்து இந்த உணவகத்தை தொடங்கினேன்” என்கிறார் கவிதா சோலங்கி.

கவிதாவின் பெற்றோரும் அண்ணியும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கவிதா ஓர் உணவுப் பிரியர் என்பதால், இந்த உணவகத்தைத் திறக்க விரும்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “நானே ஒரு பெரிய சாப்பாட்டுப் பிரியை. பல்வேறு உணவகங்களுக்கு சென்று புதுப்புது உணவுகளை சாப்பிட்டுப் பார்ப்பேன், ஒரு நாள் வீட்டில் இருக்கும்போது, ​​​​எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நான் வழக்கமாக வார இறுதிகளில் சாப்பிடும் பல்வேறு புது உணவுகளை சமைத்து பிறருக்கும் விற்றால் என்ன? அந்த எண்ணம் தான் என்னை இங்கே அழைத்து வந்தது.” என்று கூறுகிறார்.

கவிதா தனது உணவகத்தில் பாவ் பாஜி மற்றும் வடா பாவ் போன்ற இந்திய உணவுகளை விற்கிறார். கராச்சியில் இந்த உணவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பால், பல பெண்கள் இந்தத் தெருவில் உணவகங்களைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)