காணொளி: 'செங்கோட்டையன் வரவு விஜய்க்கு நல்லது' - மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் பேட்டி

காணொளிக் குறிப்பு, விஜய்- செங்கோட்டையன் கூட்டணியால் அதிமுகவுக்கு பாதிப்பா?- மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் பேட்டி
காணொளி: 'செங்கோட்டையன் வரவு விஜய்க்கு நல்லது' - மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் பேட்டி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று (நவம்பர் 27) பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவம்பர் 26 அன்று அவர் ராஜினாமா செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தவெகவில் இணைந்துள்ளார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். நேற்று தவெக கட்சியில் இணைய அக்கட்சியின் அலுவலகத்துக்கு சென்ற செங்கோட்டையனுக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டின் அரசியலில் இந்த நகர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன் கூறுவது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு