அமெரிக்க வானில் ஒளிர்ந்த மர்மப்பொருள்; சீன விண்கலமா அல்லது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டா?
அமெரிக்க வானில் ஒளிர்ந்த மர்மப்பொருள்; சீன விண்கலமா அல்லது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டா?
அமெரிக்காவில் மர்மப்பொருள் ஒன்று வானில் ஒளிர்ந்த காட்சிதான் இது.
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில் ஏப்ரல் 2ஆம் தேதி அதிகாலை வானில் ஒரு மர்மப்பொருள் ஒளிர்ந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
எதனால் இந்த நிகழ்வு ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இது சீனாவின் ஷென்ட்ச்சொ-15 விண்கலத்தின் ஒரு பகுதியாக அல்லது ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சமூக ஊடகங்களில் பலரும் சந்தேகிக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



