தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உடன் டிரம்ப் காரசார விவாதம் ஏன்?
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உடன் டிரம்ப் காரசார விவாதம் ஏன்?
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது டொனால்ட் டிரம்ப் சில பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் காணொளிகளை திரையிட்டு, தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மக்கள், விவசாயிகள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார்.
டிரம்பின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து பேசிய ராமபோசா, அவருடைய நாட்டில் கொலைகள் நடப்பது உண்மைதான் என்ற போதிலும் அதில் அதிகமாக உயிரிழப்பது கறுப்பின மக்கள் தான் என்று பதில் கூறினார்.
இந்த இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதமானது தற்போது அரசியல் வட்டாரம் மற்றும் சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
டொனால்ட் முன்வைத்த குற்றச்சாட்டு என்ன? ராமபோசா மறுப்பு தெரிவித்தது ஏன்? முழு விபரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



