'வரலாறு படைத்துள்ளோம்' - ஆதரவாளர்களிடையே டிரம்ப் ஆற்றிய உரை முழு விவரம்

'வரலாறு படைத்துள்ளோம்' - ஆதரவாளர்களிடையே டிரம்ப் ஆற்றிய உரை முழு விவரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார் டொனால்ட் டிரம்ப்.

அந்த உரையில், "நாம் நம்முடைய எல்லையை சரி செய்வோம். நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் சரி செய்வோம். பல காரணங்களுக்காக நாம் இன்று வரலாற்று ரீதியான வெற்றியை பதிவு செய்துள்ளோம்," என்று கூறினார் அவர்.

"நம்மால் முடியவே முடியாது என்று கூறினார்கள். தடைகளை தாண்டி வந்துள்ளோம். அரசியல் ரீதியாக மிகப்பெரிய விசயத்தை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.

நமது நாடு இதுவரை பார்த்திராத ஒரு அரசியல் வெற்றி இது. நான் அமெரிக்க மக்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்," என்று மக்களிடம் கூறினார் அவர்.

டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களிடையே பேசியது என்ன? முழு தகவல்கள் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)