You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் பணிச் சூழல், வாழ்க்கை எப்படி உள்ளது?
இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை என்பது 365 நாட்களும் நிற்காமல் சுழன்று கொண்டிருக்கும் தொடர்ச்சியான பணியாகும். இந்தியாவிலே நிலைத்தன்மையே இல்லாத வேலை என்றால் அது துப்புரவுப் பணி தான். சமீப நாட்களாக துப்புரவுத் தொழிலாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கும் முறை இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் வாழ்நிலை மாறிவிட்டதா என்றால் பெரிய கேள்விக்குறியே மிஞ்சம். இந்தியா துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை என்ன?
ஒவ்வொரு நாளும் நமது நகரங்கள் மலைபோல குப்பைகளை உருவாக்குகின்றன. ஆனால் இதை அகற்றுவதற்குப் பின்னால், இந்தியாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான துப்புரவுத் தொழிலாளர்களின் கைகள் உள்ளன. இதில் 98% பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாம் உருவாக்கும் கழிவுகள் இந்தத் தொழிலாளர்களின் கண்ணியத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவை.
சட்டங்கள் துப்புரவுப் பணியாளர்களான வேலைச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசினாலும் செயல்பாட்டளவில் அவை கண்துடைப்பாகவே இருந்து வருகின்றன. இந்தியா முழுவதும் நிலைமை இது தான். அதில் உள்ள இன்னல்களைக் கடந்தும் நிலையான பணி கிடைக்கும் என்கிற ஒரு காரணத்திற்காகவே அதை மேற்கொண்டவர்கள் உள்ளனர். ஆனால் அந்த குறைந்தபட்ச பாதுகாப்பும் ஒப்பந்தமுறை என்பதன் மூலம் காற்றில் பறப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய துப்புரவுத் தொழிலாளர்கள் பணிச்சூழல், வாழ்நிலை, பொருளாதார மற்றும் சமூக நிலை எவ்வாறாக உள்ளது என்பதை இந்தக் காணொளி விளக்குகிறது.
செய்தியாளர்: அஷய் யெக்டே
ஒளிப்பதிவு/படத்தொகுப்பு - டெபலின் ராய்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு