காணொளி: காஸா போருக்கு நடுவே பெத்லகேமில் பிறந்த குழந்தை

காணொளி: காஸா போருக்கு நடுவே பெத்லகேமில் பிறந்த குழந்தை

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் காஸாவில் நடந்த போருக்கு ஒரு வருடம் கழித்து, அமானி இரட்டைக் குழந்தைகளுடன், ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

பெத்லகேமின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனை, மேற்குக் கரையில் மிகவும் பரபரப்பான மகப்பேறு மருத்துவமனை. அங்கு அமானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

"எனக்கு ஏழாவது மாதத்தில், 27 வாரங்களில் குழந்தை பிறந்தது. கடவுள் ஒன்றை எடுத்துக் கொண்டார், ஆனால் மற்றொன்றை எனக்கு கொடுத்தார்" என்கிறார் அமானி.

ஆனால், அந்தக் குழந்தை மடில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள். இறுதியில் அவள் அறுவை சிகிச்சைக்கான தேவை இன்றி, வீட்டிற்கு தாயுடன் ஆரோக்கியமாக அனுப்பி வைக்கப்பட்டாள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு