காணொளி: 'அனுமதியின்றி தற்காலிக கடை' - எட்டி உதைத்த காவலர்
காணொளி: 'அனுமதியின்றி தற்காலிக கடை' - எட்டி உதைத்த காவலர்
போலீஸ் ஒருவர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு கடையை அகற்றும் காணொளி சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நெய்வாசல் என்ற இடத்தில் மஞ்சு விரட்டு போட்டி அனுமதியின்றி நடைபெற்றுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு தற்காலிக கடையில் இருந்த பொருட்களை போலீஸ் ஒருவர் தள்ளிவிட்டும் காலால் எட்டி உதைத்தும் அகற்றினார்.
இந்நிலையில், அங்கிருந்த போலீசார் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



