காணொளி: ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து - 3 பேர் பலி

காணொளிக் குறிப்பு, ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து - 3 பேர் பலி
காணொளி: ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து - 3 பேர் பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டியில் நெடுஞ்சாலையோரம் நின்றுகொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த மற்றொரு ஆம்னி பேருந்து நின்றிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மேலூர் மற்றும் மதுரை அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு