You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்வீட்டுக்கு 5%, காரத்துக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? - உணவக உரிமையாளரின் கேள்வி, நிதியமைச்சரின் பதில் - கோவையில் நடந்தது என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், கோவையில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தார்.
அப்போது கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், மத்திய அமைச்சருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு, கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவையைச் சேர்ந்த ஏராளமான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், ஜி.எஸ்.டி., வருமானவரித்துறை உள்ளிட்ட வெவ்வேறு மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர். தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பலவிதமான கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர்.
அதில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் மற்றும் தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவருமான சீனிவாசன் சில விஷயங்களைப் பேசினார். இவர் கோவையில் உனவகச் சங்கிலியையும் நடத்தி வருகிறார்.
“நீங்கள் இனிப்பு ரகங்களிக்கு 5% ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறீர்கள். இன்புட் கொடுக்கிறீர்கள். சாப்பாட்டுக்கு 5% வைத்திருக்கிறீர்கள். ஆனால் இன்புட் கிடையாது. கார வகைகளுக்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் பிரட்டையும், பன்னையும் விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றுக்கும் 28% வரை ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறீர்கள். ஒரே பில்லில் ஒரே குடும்பத்துக்கு, விதவிதமாக ஜி.எஸ்.டி., போட்டுக் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனால், பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அதுக்கு 18% ஜி.எஸ்.டி., இருக்கிறது. கஸ்டமர் ‘நீங்கள் கிரீமையும், ஜாமையும் கொடுங்கள். நானே உள்ளே வைத்துக்கொள்கிறேன்' என்கிறார். எங்களால் கடை நடத்த முடியவில்லை,” என்றார் சீனிவாசன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)