You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் வெற்றிக்கு பின்னிருக்கும் காரணம் என்ன?
'நாங்கள் சண்டையில் தோற்றுவிட்டோம், ஆனால் போர் இன்னும் முடியவில்லை'
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான முதலாவது குவாலிஃபையரில் தோற்ற பின் பஞ்சாப் கிங்ஸின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறிய வார்த்தைகள் இவை.
வெறும் வார்த்தை ஜாலத்துக்காக இதனை கூறவில்லை என்பதை மும்பைக்கு எதிரான தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஸ்ரேயாஸ் நிரூபித்துள்ளார்.
தற்போது ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் பைனலில் மீண்டும் பெங்களூருவை பஞ்சாப் சந்திக்க இருக்கிறது.
ஆமதாபாத்தில் நேற்று நடந்த 2வது தகுதிச் சுற்றில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்திருந்தது. 204 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த ஆட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டில் இருந்து 5 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் பறந்தன.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் பெரிதும் விமர்சிக்கப்பட்ட ஷ்ரேயாஸின் ஷாட் செலக்ஷன் தான் மும்பைக்கு எதிரான போட்டியில் மிகவும் பாராட்டப்பட்டது. முக்கியமாக பும்ரா வீசிய மின்னல் வேக யார்க்கரை சாமர்த்தியமாக 'தர்ட்மேன்' திசையில் பவுண்டரிக்கு திசைமாற்றியதை வர்ணனையாளர்கள் புகழ்ந்தனர்.
இந்த சீஸனின் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் அணியின் அணுகுமுறையே அதிரடியாக இருந்தது. முக்கியமாக ஸ்ரேயாஸ் அய்யரின் கேப்டன்சி பெரிதும் பாராட்டப்பட்டது.
கேப்டனாக மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக ஆடியுள்ள ஸ்ரேயாஸ், 603 ரன்கள் குவித்துள்ளார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அடித்ததுதான், ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் ஒரு இந்திய கேப்டன் அடித்த அதிபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
கடைசியாக 2014-ம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு சென்ற பஞ்சாப் கொல்கத்தாவிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.
2020-ல் டெல்லி கேபிட்டல்ஸ் 2024-ல் கேகேஆர் மற்றும் இந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் என மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற என்ற சாதனையை ஸ்ரேயாஸ் படைத்துள்ளார்.
கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரின் வெற்றிக்கு பின்னிருக்கும் காரணம் என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு