காணொளி: ஏஐ தளங்கள் முடங்கியது ஏன்?

காணொளி: ஏஐ தளங்கள் முடங்கியது ஏன்?

நவம்பர் 18-ஆம் தேதியன்று சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்கள் மற்றும் வேறுசில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன.

அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற செய்தி திரையில் தோன்றுகிறது. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது.

க்ளவுட்ஃப்ளேர் என்றால் என்ன?

கிளவுட்ஃப்ளேர் என்பது உலகம் முழுவதும் இணைய பாதுகாப்பு வழங்கும் மிகப் பெரிய சேவை வழங்குநர். உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களில் 20 சதவிகித தளங்கள் ஏதோவொரு வகையில இந்த நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துகின்றன என நிறுவனம் கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு