உயிரை பணயம் வைத்து இந்த ஆசிரியர்கள் எங்கு செல்கின்றனர்? - காணொளி

காணொளிக் குறிப்பு, உயிரை பணயம் வைத்து இந்த ஆப்கான் ஆசிரியர்கள் எங்கு செல்கின்றனர்?
உயிரை பணயம் வைத்து இந்த ஆசிரியர்கள் எங்கு செல்கின்றனர்? - காணொளி

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கு செல்ல இந்த ஆசிரியர்கள் உயிரை பணயம் வைத்து மிதந்து செல்ல வேண்டி இருக்கிறது.

46 மீட்டர் அகலமான குனார் நதியின் கரைகளை கடக்க பாலம் இல்லாததால், காற்று நிரப்பப்பட்ட டியூப்பின் உதவியுடன் இந்த ஆசிரியர்கள் ஆற்றை கடக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள் நங்கர்ஹர் மாகாணத்தில் அமைந்து இருக்கும் இந்த பள்ளியில் 1,040 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அதில் தொடக்க கல்வியை பயிலும் மாணவிகளும் உள்ளனர்.

இங்குள்ள பள்ளி கட்டடங்கள் பயன்படுத்தும் நிலையில் இல்லை என்றும். மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் கிடைப்பதில்லை என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: