பாகிஸ்தானின் கடைசி தலைமுறை மேய்ச்சல் பெண்கள்
பாகிஸ்தானில் வாக்கி சமூகத்தை சேர்ந்த கடைசி தலைமுறை மேய்ச்சல் பெண்களின் கதை வலி, வேதனை, உறுதி ஆகியவற்றை பறைசாற்றுவதாகும்.
பல நூற்றாண்டுகளாக வாக்கி சமூகத்து பெண்கள் கோடைக் காலத்தில் ஆடுகளை பாமிர் மலை தொடர் மேலே மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்கின்றனர். கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உள்ள அழகிய மலைத் தொடரான பாமிரை சென்றடைவது எளிதானதே அல்ல.
என்வே உறுதியான பெண்களே இந்த பயணத்தை மேற்கொள்ள முடிய முடியும். ஆடுகளை மேய்த்துக் கொண்டு செல்வது மட்டுமல்லாமல் 20 கிலோ மளிகைப் பொருட்களையும் அவர்கள் சுமந்து செல்ல வேண்டும்.
அவர்களின் மேய்ச்சல் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியிலிருந்து கிடைத்த பணத்தால் அவர்கள் கிராமத்தை வெளி உலகுடன் இணைக்கும் ஒரே சாலையை கட்ட முடிந்தது. இதனால் பல நாட்கள் எடுக்கும் பயணம் தற்போது சில மணி நேரங்களே ஆகின்றன.
கல்வியின் காரணமாக அடுத்த தலைமுறை பெண்கள் முன்னேறி வருகின்றனர். அவர்கள் இப்பகுதியில் மலையேற்ற முகாம், சுற்றுலா விடுதி ஆகியவை அமைத்து வருமானத்துக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



