குருந்தூர்மலை: இலங்கையின் அயோத்தியா? இந்து-பௌத்தர் பிரச்னை என்ன?
குருந்தூர்மலை: இலங்கையின் அயோத்தியா? இந்து-பௌத்தர் பிரச்னை என்ன?
இலங்கையில் முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில் இந்துகளுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்ன?
குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் ஆகியன ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இந்த இடத்திற்கு இந்து, பௌத்தர் ஆகிய இரு தரப்பினருமே உரிமை கோருகின்றனர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கு முன்பு வரை இந்துக்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் இங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.
தற்போது, தொல்லியல் பெறுமதி மிக்க இடம் என்பதால் பொங்கலிட்டு வழிபடக் கூடாது என்று பௌத்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்னை எழுந்துள்ளது.
அதுகுறித்த முழு விவரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



