காலி பால் பாக்கெட்டில் கைவண்ணம் - அசத்தும் 82 வயது முதியவர் - காணொளி

காணொளிக் குறிப்பு, காலி பால் பாக்கெட்டில் கைவண்ணம் - அசத்தும் 80 வயது முதியவர்
காலி பால் பாக்கெட்டில் கைவண்ணம் - அசத்தும் 82 வயது முதியவர் - காணொளி

நேபாளத்தின் லலித்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 82 வயதான பாபுகாசி மஹார்ஜன்.

இவர் ஒரு மகப்பேறு மருத்துவமனையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் முதுமை இவரை முடக்கிவிடவில்லை. இப்போதும் பிஸியாகவே இருக்கிறார்.

மக்கள் உபயோகித்து தூக்கி எறியும் பால் பாக்கெட்டுகளில் இருந்து பைகள், தொப்பிகள், மேல்சட்டைகள் எனப் பல பொருட்களைத் தயாரிக்கிறார்.

இவர் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் இவரது வீட்டிற்கும், வீட்டிற்கு அருகிலிருப்பவர்களுக்கும் பயன்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளிலிருந்துய் வரும் பயணிகளும் சில சமயம் இவற்றை வாங்கிச் செல்வதாகக் கூறிகிறார்.

பிபிசி நேபாள சேவைக்காக ஸ்ரீஜனா ஷ்ரேஷ்தா தயாரித்த காணொளி.

நேபாளம், முதியவர், பால் பாக்கெட்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: